News August 6, 2025
மாதத்தில் 31 நாள்கள் இருக்க.. ஏன் ரீசார்ஜ் மட்டும் 28 நாள்?

மாதத்தில் 31 நாள்கள் இருக்க, ஏன் ரீசார்ஜ் பிளான்கள் 28 நாள்கள் மட்டுமே இருக்கிறது என யோசித்ததுண்டா? இது ஒரு வியாபார யுக்தி. ஒரு வருடத்தில் 12 முறை 28 நாள் ரீசார்ஜ் செய்தால், வருடத்திற்கு 336 நாள்களுக்கே மட்டுமே சேவை கிடைக்கும். மீதமுள்ள 29 நாள்களுக்காக மீண்டும் ரீசார்ஜ் செய்வோம். ஆக, 12 மாதங்கள்தான் என்றாலும், 13 முறை ரீசார்ஜ் செய்வோம். நமக்கு ஒரு மாதம் நஷ்டம்.. நிறுவங்களுக்கு லாபம்!
Similar News
News August 6, 2025
தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய ‘கிங்டம்’ படக்குழு

ஈழத் தழிழர்கள் குறித்து தவறாக சித்தரித்ததாக கூறி தமிழகத்தில் ‘கிங்டம்’ படத்தை திரையிட நாதக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் தமிழ் மக்களின் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம் என ‘கிங்டம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கிங்டமில் இடம்பெற்ற காட்சிகள் கற்பனையானவை மட்டுமே எனவும் மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
News August 6, 2025
அடுத்தடுத்து கட்சி மாறிய மன்னன் குடும்ப வாரிசுகள்!

கடந்த வாரம் EPS முன்னிலையில் ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமான நிலையில், இன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். புதுக்கோட்டை தொகுதியில் 1967 முதலே கார்த்திக் தொண்டைமானின் குடும்பம் அரசியல் வலிமை கொண்டது என்பதால், இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனப்படுகிறது. உங்கள் கருத்து?
News August 6, 2025
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்

ஒருகாலத்தில் சாக்லெட் பாய் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். பின்னர் படவாய்ப்புகள் குறையவே, சில விளம்பரங்களில் மட்டுமே அப்பாஸை பார்க்க முடிந்தது. நியூசிலாந்தில் செட்டிலான அப்பாஸ் இப்போ மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். அறிமுக இயக்குநர் மரியராஜா இளஞ்செழியன் இயக்கும் படத்தில் அப்பாஸுடன், ஜி.வி. பிரகாஷ், கௌரி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். உங்களுக்கு பிடித்த அப்பாஸ் படம் எது?