News August 26, 2024
அப்போதுதான் அமைச்சரவை மாற்றம்?

செந்தில் பாலாஜி (S.B) ஜாமினில் வந்ததும் அமைச்சரவை மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. CM ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன்பு அமைச்சரவை மாற்றப்படலாம் என செய்தி வெளியானபடி இருந்தது. ஆனால் பணமோசடி வழக்கில் கைதான S.B. ஜாமின் கிடைத்து வெளிவந்தபிறகு அமைச்சரவையை மாற்றலாம், அதுவரை முடிவை தள்ளிவைக்கலாம் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 27, 2025
CINEMA 360°: பட்டையை கிளப்பும் கார்த்தி பட பாடல்

*56-வது சர்வதேச திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் சிறந்த திரைப்பட அடையாள விருதை ‘ஆக்காட்டி’ திரைப்படம் பெற்றுள்ளது. *விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. *பிரதீப் ரங்கநாதனின் ’LIK’ படத்தில் இருந்து நாளை சிங்கிள் ஒன்று வெளியாகிறது. *கார்த்தியின் ‘வா வாத்தியர்’ படத்தின் 2-வது பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.
News November 27, 2025
ராசி பலன்கள் (27.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 27, 2025
விஜய்யை மீண்டும் சீண்டிய சீமான்

திருச்சியில் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ள நாதகவின் மாநாட்டுக்கு உங்கள் பரம்பரையை அழைத்து வர வேண்டும் என தொண்டர்களுக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நடிகனுக்கு தான் கூட்டம் கூடுமா, தற்குறி பயதான் கூடுவானா, தத்துவகாரனுக்கும் கூட்டம் கூடும் என விஜய்யை மறைமுகமாக சாடினார்.234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாதக தமிழகத்தில் பெரிய கட்சி என்றும் சீமான் கூறியுள்ளார்.


