News April 20, 2024
சனி பார்வையால் கோடிகள் கொட்டப் போகும் ராசிகள்

நவகிரகங்களின் நீதிமானான சனி பகவானின் அஸ்தமன செயல்பாடு 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும். அந்த வகையில், மிதுனம், கடகம், சிம்மம், மீனம் ராசியினருக்கு கோடி கோடியாக பணம் கொட்டப் போகிறது. குறையில்லாத செல்வம், வியாபாரத்தில் லாபம், புதிய தொழில் தொடங்கும் யோகம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற பல சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.
Similar News
News February 2, 2026
மத்திய பட்ஜெட்.. சைலண்ட் மோடில் விஜய்

மத்திய பட்ஜெட்டை அதிமுக வரவேற்றுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதனிடையே, பட்ஜெட் குறித்து விஜய் மட்டுமின்றி தவெக தலைவர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, சமூகம் சார்ந்த பல பிரச்னைகளுக்கு விஜய் தாமதமாக குரல் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இன்று நடக்கும் தவெக 3-ம் ஆண்டு விழாவில் இதுபற்றி பேசுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 2, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 2, தை 19 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News February 2, 2026
TN அரசில் 709 வேலைவாய்ப்பு.. உடனே முந்துங்க

மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்கள், பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களில் மொத்தம் 709 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆபிஸ் அசிஸ்டண்ட், டிரைவர், நைட் வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. சம்பளமாக ₹15,700 வழங்கப்படும். ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.


