News October 24, 2024
அம்பானிக்கே ஆஃபர் தந்த இளைஞர்

ஆப் டெவலப்பராக உள்ள டெல்லி இளைஞர், ரிலையன்ஸின் ஜியோவும், Disney+ Hotstar-ம் இணையும் என கணித்து, கடந்த ஆண்டே JioHotstar.com என்ற இணைய பக்கத்தை வாங்கிவிட்டார். தற்போது இணைப்பு உறுதியான நிலையில், “உங்களுக்கு தேவைப்படும் JioHotstar.com டொமைனை கொடுக்க நான் தயார். பதிலுக்கு கேம்ப்ரிட்ஜில் படிக்க எனக்கு தேவையான ரூ.1 கோடியை தருவீர்களா..’ என கடிதம் எழுதி டீல் பேசியுள்ளார். ஆனால், ரிலையன்ஸ் இதை ஏற்கவில்லை.
Similar News
News January 8, 2026
பொங்கலுக்கு வா வாத்தியார் ரிலீஸ்?

சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால், பொங்கலுக்குள் விஜய்யின் ஜனநாயகன், SK-வின் பராசக்தி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இரு படங்களும் வெளியாகவில்லை என்றால், கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த விக்ரமின் துருவ நட்சத்திரமும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 8, 2026
நாளை அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு?

டெல்லியில் <<18795902>>அமித்ஷாவை<<>> சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய EPS-ஐ, நாளை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை EPS வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, பாஜவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் மற்றும் டிடிவி தினகரன் விவகாரம் பற்றியும் இருவரும் ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 8, 2026
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை

ஜன.15 வியாழனன்று பொங்கல் பண்டிகை வருவதால், 4 நாள்கள் தொடர் விடுமுறை என்பது அனைவரும் அறிந்ததே. ஜனவரியிலேயே கூடுதல் சர்ப்ரைஸாக, மற்றொரு தொடர் விடுமுறையும் வருகிறது. ஜன.26 திங்களன்று குடியரசு தினம் கொண்டாடப்பட இருப்பதால் சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து 3 நாள்கள் லீவுதான். இதையொட்டி, அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளதால் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிடுங்கள் மாணவர்களே!


