News August 6, 2025
ஒரு நாட்டையே உருவாக்கிய இளைஞர்!

400 பேரைக் கொண்ட குட்டி நாடு ஒன்றை உருவாக்கி, அதற்கு தன்னை தானே அதிபர் என்று அறிவித்துள்ளார் 20 வயது இளைஞர் டேனியல் ஜாக்சன். குரோஷியா – செர்பியா இடையே யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் நிலத்தை தான், ‘ரிபப்ளிக் ஆஃப் வெர்டிஸ்’ என்ற நாடாக அறிவித்துள்ளார் இந்த ஆஸ்திரேலிய இளைஞர். அதோடு கொடி, நாணயத்தையும் அறிவித்து ‘யாரு சாமி இவன்’ என நெட்டிசன்களை கூற வைத்துள்ளார்.
Similar News
News August 6, 2025
மழையில் ஃபோன் நனையாமல் காக்க…

மழையில் உங்கள் ஃபோன் நனையாமல் காக்க, எப்போதும் வாட்டர்புரூப் பவுச் வைத்திருக்கவும் *ஜிப்லாக் பவுச் மற்றும் சிலிகா ஜெல் பாக்கெட்களும் உங்கள் போன் ஈரமாகாமல் காக்கும் *அழைப்புகளை ஏற்க புளூடூத் ஹெட்போன்கள் பயன்படுத்தலாம் *மழையில் போனில் ஈரம் புகுந்துவிட்டால், சார்ஜ் போடுவதை கட்டாயம் தவிர்க்கவும் *அரிசிக்குள் (அ) சிலிகா ஜெல் பாக்கெட்கள் கொண்ட ஜிப்லாக் கவரில் ஈரம் உறிஞ்சப்படும் வரை போட்டு வைக்கலாம்.
News August 6, 2025
மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சி தலைவர்கள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமா, முத்தரசன், சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. 2026 தேர்தலை எதிர்கொள்வது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வருவது குறித்தும் வலியுறுத்த உள்ளனர்.
News August 6, 2025
தங்கம் விலை ₹75 ஆயிரத்தை தாண்டியது

ஆபரணத் தங்கத்தின் விலை 3-வது நாளாக இன்றும் உயர்ந்து ₹75 ஆயிரத்தை தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று சவரனுக்கு ₹80 உயர்ந்து ₹75,040-க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹9,380-க்கும் விற்பனையாகிறது. கடந்த 1-ம் தேதி ஆபரணத் தங்கம் (சவரனுக்கு) ₹73,200ஆக இருந்த நிலையில், 5 நாள்களில் ₹1,840 அதிகரித்துள்ளது.