News August 10, 2025
3 மாதங்களில் இல்லாத சரிவு.. நாளை மீளாவிட்டால் ஆபத்து

பங்குச்சந்தைகளின் தொடர் சரிவு பல லட்சம் கோடிகளை இழக்க வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த 8-ம் தேதி 79,858 புள்ளிகளுக்கு Sensex சென்றது. Nifty 1% சரிந்து 24,363 புள்ளிகளில் நிறைவடைந்தது. USA-வின் வரியால் ஏற்பட்டுள்ள இந்த சரிவில் இருந்து மீளாவிட்டால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை உலக நிறுவனங்களின் பக்கம் செல்வதோடு, பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Similar News
News August 10, 2025
MGR குறித்து சர்ச்சை பேச்சு.. திருமா விளக்கம்

MGR, ஜெ., குறித்து திருமா பேசியது சர்ச்சையான நிலையில், EPS, OPS உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், MGR, ஜெ.,வை அவமதிக்கவில்லை; ஒரு ஒப்பீட்டுக்காக பேசிய தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திருமா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆளும் இல்லை எனக் கூறிய அவர், தன் பேச்சின் முக்கிய நோக்கம் குறித்து தெளிவுப்படுத்தினார்.
News August 10, 2025
அபராத வட்டியை தள்ளுபடி செய்தது TNHB.. செக் பண்ணுங்க!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 31.3.2025-க்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற வீடுகளுக்கு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *மாதத் தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி. *வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி. *நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்கான வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. <
News August 10, 2025
நடிகர் விஜய்யின் சொத்து எவ்வளவு தெரியுமா?

நடிகரும், TVK தலைவருமான விஜய்யின் சொத்து மதிப்பு சுமார் ₹600 கோடி என TOI தெரிவித்துள்ளது. நீலாங்கரை சொகுசு பங்களா, 10 நிறுவனங்களின் விளம்பர தூதர், ரோல்ஸ் ராய்ஸ், BMW X5 & X6, Audi A8 L, Mercedes Benz GLA உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களும் இதில் அடங்கும். குறிப்பாக ஆண்டுக்கு சராசரியாக ₹100 முதல் ₹120 கோடி வரை அவர் சினிமா மூலம் வருமானம் ஈட்டுவதாகவும் TOI செய்தி கூறுகிறது. அடேங்கப்பா..!