News February 13, 2025

உலகில் 2 முறை பிறந்த அதிசய குழந்தை!

image

அமெரிக்காவின் டெக்ஸாஸில், 16 வார கர்ப்பிணியான Margaret Hawkins Boemer என்பவரின் வயிற்றிலிருந்த குழந்தைக்கு முதுகுத் தண்டில் tumor இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சையளித்து கட்டி அகற்றப்பட்டது. பின்னர், 20 நிமிடங்கள் கழித்து, குழந்தையை வயிற்றில் வைத்து, தாயின் Womb தைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குழந்தை மீண்டும் பிறந்தது.

Similar News

News February 13, 2025

வார இறுதி விடுமுறை.. 627 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 627 சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை, நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்கள் சிறப்பு பஸ்களை போக்குவரத்துத் துறை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 485, கோயம்பேட்டில் இருந்து 102, மாதவரத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

News February 13, 2025

யாரை கண்டும் எங்களுக்கு பயம் இல்லை: சாண்டோ

image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என வங்கதேச கேப்டன் சாண்டோ கூறியுள்ளார். வங்கதேச அணியின் ஒவ்வொரு வீரருமே தனியாக கோப்பையை வென்று கொடுக்கும் திறமையுடையவர்கள் என்றும், இந்த படை பெரிய அணியையும் வீழ்த்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி, தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News February 13, 2025

இந்தியாவின் டாப் 6 கோடீஸ்வர குடும்பங்கள்!

image

ஆசியாவிலேயே டாப் 6 இந்திய கோடீஸ்வர குடும்பங்களை ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 1) முகேஷ் அம்பானி குடும்பம் (சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடி), 2) மிஸ்ட்ரி குடும்பம் (ரூ.3.25 லட்சம் கோடி), 3) ஜிண்டால் குடும்பம் (ரூ.2.44 லட்சம் கோடி), 4) பிர்லா குடும்பம் (ரூ.1.99 லட்சம் கோடி), 5) பஜாஜ் குடும்பம் (ரூ.1.74 லட்சம் கோடி), 6) இந்துஜா குடும்பம் (ரூ.1.32 லட்சம் கோடி).

error: Content is protected !!