News April 4, 2024
உலகின் மிக வயதான மனிதர் காலமானார்

உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை படைத்த வெனிசுலாவின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (114) மரணமடைந்துள்ளார். ஜுவான் 1909 மே 27-இல் பிறந்தார். இவர், 11 குழந்தைகளுக்கு தந்தையாவார். 2022 நிலவரப்படி அவருக்கு 41 பேரக் குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022, பிப். 4 அன்று உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை அமைப்பு அவரை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
தேனியில் 1,550 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.23ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீரபாண்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 8, 10, 12th, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 16 நிறுவனங்களில் 1,550 காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும், விவரங்களுக்கு 76959-73923 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT
News January 21, 2026
இனி ரயில்வே ஸ்டேஷன்களில் ₹14 தான்!

ரயில்வே ஸ்டேஷன்களில் ‘<<17789708>>ரயில் நீர்<<>>’ 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் ₹14-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், விற்பனையாளர்களிடம் ‘ரயில் நீர்’ பாட்டில்கள் காலியானால், மற்ற தண்ணீர் பாட்டில்களையும்(Aquafina, Bisleri) ₹14-க்குதான் விற்க வேண்டும் என தற்போது IRCTC உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிக விலைக்கு விற்பனை செய்தால், 139 என்ற ரயில்வே உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
News January 21, 2026
BREAKING: ஒரே நாளில் விலை தாறுமாறாக மாறியது

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு இரண்டே நாள்களில் ₹6,400 வரை உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதேநேரம், நேற்று புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை இன்று மாற்றம் ஏதும் இல்லாமல் அதே நிலையில் நீடிக்கிறது. இதன்படி, 1 கிராம் வெள்ளி ₹340-க்கும், 1 கிலோ ₹3.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.


