News April 21, 2024
இந்தியாவில் வாழ்ந்த உலகின் மிக நீளமான பாம்பு

குஜராத்தின் பண்டாரோ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 15 மீட்டர் நீளமுள்ள ராட்சத பாம்பின் படிமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வாசுகி என பெயரிடப்பட்ட இந்த பாம்பு, 4.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 1,000 கிலோ எடை கொண்ட பாம்பு எனக் கூறப்படுகிறது. 1921ஆம் ஆண்டு ஒரு பச்சை அனகோண்டா உலகின் மிக நீளமான பாம்பு என்ற கின்னஸ் சாதனை பெற்றது. அதன் நீளம் 10 மீட்டர் அகும்.
Similar News
News November 17, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

வாரத்தின் முதல் நாளான இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹92,320-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹11,540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கம் விலை மொத்தம் ₹2,880 குறைந்துள்ளது.
News November 17, 2025
குண்டுவெடிப்பில் இதை இன்னும் கண்டுபிடிக்க முடியல!

டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமரின் போனை இன்னும் டிரேஸ் செய்யமுடியவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு முன் அவர் போனில் பேசியது தெரியவந்திருக்கிறது. அவர் பயன்படுத்திய 2 செல்போன்கள் கிடைத்தால், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது யார், எங்கிருந்து நிதி வந்தது என பல தகவல்கள் கிடைக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
News November 17, 2025
இன்று NDA கூட்டணி MLA-க்கள் ஆலோசனை

பிஹாரில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக NDA கூட்டணி MLA-க்கள், இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். மீண்டும் CM ஆக நிதிஷ்குமாரே தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. நவ.22-ல் தற்போதைய அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், இன்று நிதிஷ் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளிப்பார். இதன் பிறகு, நவ.22-க்குள் நிதிஷ் CM ஆக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


