News December 29, 2024

உருகி வரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

image

காலநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டு வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஏ23ஏ பனிப்பாறை அடுத்த ஒரு மாதத்திற்குள் உடைந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுக்கு அருகில் உறைந்துள்ள இந்த பனிப்பாறை உடைந்தால், கடல் நீர் மட்டம் உயர்ந்து, ஊருக்குள் கடல் நீர் புகும் ஆபத்தான சூழல்.

Similar News

News March 6, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

News March 6, 2026

CINEMA 360°: பிரதீப்பின் சம்பளம் ₹50 கோடி

image

*ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘Ordinary Man’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது *சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ ஏப்.3-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டீசர் வெளியானது *தனது அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ₹50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் *மலையாள இயக்குநர் தின்ஜித்திடம்(EKO) தனுஷ் கதை கேட்டுள்ளாராம் *ஜீவாவின் ‘TTT’ 50 நாள்களை கடந்தது

News March 6, 2026

SPORTS 360°: இன்று இந்தியா W – ஆஸி., W டெஸ்ட்

image

*இந்தியா, ஆஸி., மகளிர் அணிகள் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று பெர்த்தில் தொடக்கம் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம் *U20 மகளிர் கால்பந்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் கிளப் அணியை வீழ்த்தியது *ISL கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகளுக்கு இடையிலான மோதல் கோலின்றி டிராவில் முடிந்தது *ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரஷித் கான் நீக்கம்

error: Content is protected !!