News April 11, 2025
AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!

AI வளர்ச்சி பல துறைகளில் மனிதனை ஓரங்கட்ட தொடங்கி விட்டது. AI உதவியுடன், உலகில் முதல் குழந்தை பிறந்துவிட்டது. மெக்சிகோ நாட்டை சேர்ந்த 40 வயது பெண்ணிற்கு IVF முறையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. IVF என்பது, Intracytoplasmic sperm ஊசியின் மூலம், நேராக கருமுட்டையில் விந்தணுவை மனித உதவியுடன் செலுத்தப்படுவதாகும். ஆனால், AI வந்துவிட்டதால், இனி மனித உதவி தேவைப்படாது. இன்னும் என்னலாம் மாறப்போகிறதோ!
Similar News
News November 24, 2025
காங்., படுதோல்விக்கு இதுவே காரணம்: அண்ணாமலை

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை, இந்தியா முழுதும் உள்ள அனைத்து மக்களிடமும் இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். இதே மனநிலைதான் பிஹாரில் இருந்ததாகவும், அதனால்தான் NDA கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிஹாரில் காங்கிரஸுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதே நிலைதான் தமிழகத்திலும் நடக்கும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News November 24, 2025
ஷுப்மன் கில் எப்போது அணிக்கு திரும்புவார்?

தெ.ஆ., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்துவரும் அவர் இதுவரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மும்பையில் பிரபல முதுகுத்தண்டுவட சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவரும் அவர், 2026-ல் தான் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
News November 24, 2025
BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


