News April 26, 2024
உலகின் ஆதிக்கனி மாம்பழம்?

மாம்பழம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஆதிக்கனி எனக் கூறப்படுகிறது. 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே மாமரங்கள் இருந்ததற்கான படிமங்கள் கிடைத்துள்ளன. வடகிழக்கு இந்தியா, மியான்மர், வங்கதேசப் பகுதிகள் மாம்பழத்தின் பிறப்பிடமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங், மாம்பழங்களை எடுத்துச் சென்றதற்கான குறிப்புகள் உள்ளன.
Similar News
News August 25, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17510524>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. மத்திய பிரதேசம்.
2. தொடை எலும்பு (Femur)
3.1982
4. அரசமரம்
5. சாய்னா நேவால் (2012)
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 25, 2025
விஜய் மீது மிக அசிங்கமான தாக்குதல்.. கேட்கவே காது கூசுது

ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் கூறியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை நடிகைகளுடன் இணைத்து பேசி, திமுக MLA கே.பி.சங்கர் அநாகரிகமாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு த்ரிஷா கூட போலாமா, கீர்த்தி சுரேஷ் கூட போலாமா என்றுதான் தெரியும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது; ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால், துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று மோசமாக பேசியுள்ளார்.
News August 25, 2025
ஆம்புலன்ஸ் தாக்குதலுக்கு EPS தான் காரணம்: எழிலன்

இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதால் தான் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியதாக திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம் என கேட்ட அவர், EPS பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.