News March 28, 2024
105 கோடி மெட்ரிக் டன் உணவை வீணடித்த உலகம்

2022 இல் உலகளவில் 105 கோடி மெட்ரிக் டன் (19%) உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டதாக ஐ.நா சபை (சுற்றுச்சூழல் பிரிவு) தெரிவித்துள்ளது. உணவு வீணடிக்கப்படுவது குறித்த அதன் அறிக்கையில், “உலகம் முழுவதும் 78 கோடி பேர் நாள்பட்ட பட்டினியை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் 79 கிலோ உணவை வீணாக்குகின்றனர். உணவை வீணாக்குவதில் வீடுகள் 60% பங்கு வகிக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
இந்திய வீரர் காயம்

நியூசி.,க்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயமடைந்தார். 16-வது ஓவரில் அவர் வீசிய பந்தை மிட்செல் வேகமாக விளாச, அதை பிடிக்க கையை நீட்டினார். ஆனால், பந்து கையின் நுனியில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதில், அவரது கையில் ரத்தம் வந்து, வலி தாங்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். காயத்தால் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News January 22, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 588 ▶குறள்: ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். ▶பொருள்: ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியை, மற்றோரு உளவாளி கொண்டு வந்த செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
News January 22, 2026
CM ஸ்டாலினிடம் EPS வலியுறுத்தல்

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண CM ஸ்டாலினை EPS வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் X தளத்தில், டந்த 6 மாதங்களாக வளர்ப்பு கூலியை உயர்த்தக் கோரி போராடி வரும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளுடன் திமுக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகிறது. அவர்களை உடனடியாக விடுவித்து, சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


