News November 25, 2024

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

image

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் டிங் லிரேன், இந்தியாவின் குகேஷ் ஆகியோர் மோதுகின்றனர். டிச.13 வரை நடக்கும் இந்த போட்டி 14 சுற்றுகளைக் கொண்டது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரைப் புள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளியை எட்டுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

Similar News

News November 25, 2025

பழனியில் 15 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்!

image

பழனி காவல் உதவிஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் சிவகிரிப்பட்டி பழனியாண்டவர் கல்லூரி அருகில் ரோந்து சென்றனர். அப்போது கல்லூரி பஸ்நிறுத்தம், தண்ணீர் தொட்டி அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த மாரிமுத்து, பெரியசாமி, ராஜா, கார்த்திகேயன், பிரிஜித், அமுதநிலவன், ராமசந்திரன் என மொத்தம் 15 பேரை மடக்கி பிடித்து கைது செய்து, சிக்கியவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, 5 மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

News November 25, 2025

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $59.47 உயர்ந்து, $4,130-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமும் கண்டு வருகிறது. நேற்று (நவ.24) மட்டும் சவரனுக்கு ₹880 குறைந்து, ₹92,160-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News November 25, 2025

கனமழை.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

image

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, *அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடுவது & மிதிப்பது தவிர்க்கவும். *மின் கம்பம் அருகில் செல்வதையோ & தொடுவதையோ தவிர்க்கவும். *தெரு மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நடப்பதை தவிர்க்கவும்.

error: Content is protected !!