News December 21, 2024
முதலிரவில் கஞ்சா கேட்ட பெண்

உத்தர பிரதேசத்தில் திருமணமான முதல் இரவிலேயே மணப்பெண் பீர், கஞ்சா, மட்டன் ஆகியவற்றை கேட்டதால் மணமகன் விவாகரத்து கேட்டிருக்கிறார். மணப்பெண்ணுக்கு முன்னரே இத்தகைய பழக்க வழக்கங்கள் இருந்ததாக தெரிகிறது. இதனை முதலிரவில் அறிந்துகொண்ட மணமகன், உடனடியாக குடும்பத்திடம் கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல, பஞ்சாயத்து விவாகரத்து வரை சென்றுவிட்டது.
Similar News
News April 1, 2026
CINEMA 360: ஹீரோயினான தமிழக அமைச்சரின் மகள்!

*நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா ‘ஹார்ட்டின்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் *‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்கும் ‘D56’ படம், ‘புஷ்பா’ மாதிரியான ஆக்ஷன் படமாக இருக்குமாம் *நடிகை அளித்த புகாரில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளார் *சூரி நடித்துவரும் ‘மண்டாடி’ படத்திற்காக குட்டி கடல் செட்டை அமைத்துள்ளார்களாம்.
News April 1, 2026
பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு எப்போது?

பாஜக வேட்பாளர்கள் தேர்வில் தொடர் இழுபறி நீடிக்கிறது. நேற்று, பியூஷ் கோயல் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக பேசிய நயினார் நாகேந்திரன், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் கொண்ட பட்டியலை தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் பட்டியல் வெளியாகும் என்றும் கூறினார். <<19529276>>அண்ணாமலையின் பெயர் பட்டியலில் உள்ளதா<<>> என்ற கேள்விக்கு அனைவரது பெயரும் உள்ளது என்றார்.
News April 1, 2026
BIG NEWS: விழுந்து நொறுங்கிய விமானம்.. 29 பேர் பலி

ரஷ்யாவின் ராணுவ விமான விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ‘AN 26’ விமானம் கிரிமியா தீவு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில், 23 பயணிகள், 6 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், வெளிப்புறத் தாக்குதல் எதுவும் இல்லை எனவும் ரஷ்ய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த வாரம் கொலம்பியா ராணுவ விமான விபத்தில் 70 பேர் பலியான வடு மறைவதற்குள் அடுத்த விபத்து நிகழ்ந்துள்ளது.


