News May 13, 2024

ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்த பெண்

image

நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பிஹாரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் பெண் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வெறும் தண்ணீரை மட்டும் குடித்து வாழ்த்து வரும் அவர், ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற தனது ஆசையை மகன்களிடம் கூறி இன்று வாக்களித்துள்ளனர்.

Similar News

News August 7, 2025

ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

image

*ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை. *இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம். *உங்கள் சொந்த ஆன்மாவில் நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும் வரை, இந்த முழு உலகமும் உங்களுக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றும். *வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.

News August 7, 2025

வாடகைக்கு மட்டுமே ₹1,500 செலவு: PM வருத்தம்

image

டெல்லியில் 50 வெவ்வேறு இடங்களில் பல மத்திய அமைச்சகங்கள் இயங்கி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கால கட்டிடங்களில் போதிய வசதிகள் இன்றி அமைச்சகங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றிற்கு வாடகை ₹1,500 கோடி செலவாவதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஆனால், ‘விக்‌ஷித் பாரத்’ தொலைநோக்கு பார்வையின் ஒருபகுதியாக புதிய கட்டிடங்களுக்கு அமைச்சகங்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

இனவெறி.. 6 வயது இந்திய சிறுமி மீது தாக்குதல்

image

அயர்லாந்தில் இனவெறி காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் பிறப்புறுப்பிலும், சைக்கிளை ஏற்றி 12-14 வயது சிறுவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அயர்லாந்தில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட 5வது தாக்குதலாகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவிலும் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

error: Content is protected !!