News March 19, 2025
சொன்னதை செய்த டிரம்ப் என வெள்ளை மாளிகை புகழாரம்!

சுனிதா வில்லியம்ஸ் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை டிரம்ப் நிறைவேற்றியுள்ளதாக வெள்ளை மாளிகை புகழாரம் சூட்டியுள்ளது. எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுக்கு நன்றி கூறியுள்ள வெள்ளை மாளிகை, பூமி திரும்பியுள்ள சுனிதா, வில்மோருக்கு உடல், மனரீதியாக தேவைப்படும் அனைத்தையும் நாசா ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
BREAKING: தங்கம் விலை Record படைத்தது.. இதுவே முதல்முறை

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹60 உயர்ந்து ₹10,290-க்கும், சவரனுக்கு ₹480 உயர்ந்து, ₹82,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வரலாற்றில் ₹82,320-க்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை. இனி வரும் நாள்களிலும் விலை குறையாது என கூறப்படுவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News September 20, 2025
தமிழ்நாட்டில் ”கஞ்சா” ஆம்லேட்: EPS

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் தாரளமாக கிடைப்பதால், தமிழக இளைஞர்கள் சீரழிவதாக EPS குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா சாக்லெட் வடிவத்தில் வந்துள்ளது; ஆம்லெட்டில் கூட கஞ்சாவை கலக்கி விற்கிறார்கள் என சாடிய அவர், போதைப்பொருள் அதிகரிப்பு பற்றி சட்டசபையில் பலமுறை பேசினேன். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத CM, இப்போது தாமதமாக விழித்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட CM நமக்கு தேவையா என கேள்வி எழுப்பினார்.
News September 20, 2025
இவ்வளவு விலையா?

இன்றைய உலகில் விலையை எது வரையறுக்கிறது. ஆடம்பரமான உடைமைகளா? தனித்துவமான பொருள்களா ? பழைமையான வரலாற்று சிறப்புடையதா? பல்வேறு காரணிகள் உள்ளன. அந்த வகையில் மேலே, உலகில் மிகவும் விலை உயர்ந்த சிலவற்றை கொடுத்து இருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த விலை உயர்ந்தவை ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.