News August 18, 2024
தேர்தல் வியூகம் அமைக்க களமிறங்கும் வார்ரூம் தலைகள்

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த மாநிலங்களில் வென்றே தீர வேண்டுமென காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது. இதற்கான பணிகளை முடுக்கிவிடும் வகையில், தேர்தல் வியூகங்களை அமைக்க காஷ்மீர் கோகுல் புடெய்ல், நவீன் ஷர்மா, வம்சி ரெட்டி ‘வார்ரூம்’ பொறுப்பாளர்களாக அக்கட்சியின் தேசியத் தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 14, 2025
கவர்னர் RN ரவியின் விருந்தை புறக்கணிக்கும் CM ஸ்டாலின்!

சுதந்திர தினத்தையொட்டி நாளை மாலை ராஜ்பவனில் நடக்கவுள்ள தேநீர் விருந்தை CM ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மரபாக நடக்கும் இவ்விழாவை ஏற்கெனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் நலனுக்கு எதிராக கவர்னர் ரவி செயல்படுவதால் அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக CM ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
News August 14, 2025
ஆக. 17-ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் ராமதாஸ்?

விழுப்புரம், பட்டானூரில் ஆக. 17-ம் தேதி நடக்கும் PMK சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என ராமதாஸ் கூறியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சோஷியல் மீடியாவில் தன்னையும், GK மணி குறித்தும் ஒரு கும்பல் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது என்றார். மேலும், கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்விக்கு அங்கே வாருங்கள் முடிவு கிடைக்கும் என சூசகமாக கூறியுள்ளார்.
News August 14, 2025
இந்தியாவிற்கு வரியை மேலும் உயர்த்துவோம்: USA மிரட்டல்

டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், இந்திய பொருள்களுக்கு மேலும் வரியை அதிகரிப்போம் என அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசண்ட் எச்சரித்துள்ளார். உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புடின் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முன்னதாக, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி, போரில் ரஷ்யாவிற்கு உதவுவதாக கூறி இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரிவிதித்தது.