News January 1, 2025
களஞ்சியம் இன்று முதல் கட்டாயம்!

TN அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் களஞ்சியம் (Kalanjiyam) ஆப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமே இனி CL, EL விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இது தவிர, Pay Slip, Pay Drawn, Particulars போன்ற தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பண்டிகை காலத்தில் முன்பணம், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முன்பணம் ஆகியவற்றுக்கும் இந்த ஆப் மூலமே விண்ணப்பிக்கலாம் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
Similar News
News November 20, 2025
கூட்டணி ரூட்டை மாற்றுகிறாரா விஜய்?

கொள்கை எதிரி பாஜக உடன் கூட்டணி கிடையாது என கூறிவந்த விஜய், தற்போது NDA கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பிஹார் தேர்தலில் PK-வின் கட்சி மரண அடி வாங்கியதால், நாமும் தனித்து போட்டியிட்டால் படுதோல்வி அடைவோமோ என விஜய் யோசிக்கிறாராம். ஒருவேளை அதிமுக கூட்டணியில் இணைந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் தவெக வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
News November 20, 2025
மீண்டும் புயல் சின்னம்… கனமழை வெளுக்கப் போகுது!

வங்கக் கடலில் நவ.22-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அது 2 நாள்களில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் IMD கணித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை அரியலூர், கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கவனமாய் இருங்கள்!
News November 20, 2025
ChatGPT பயன்பாடு இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

ஆகஸ்டு 2025-ல் ஒட்டுமொத்தமாக ChatGPT டிராபிக் உலகளவில் 5.8 பில்லியன் வருகையை எட்டியது. இதில், எந்த நாடுகளில் அதிக டிராபிக் இருந்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இந்த தகவலை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE


