News May 7, 2025
விஜய்யை கவலைப்பட வைத்த தவெக தொண்டர்கள்!

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கின்போது தவெக தொண்டர்கள் செய்த செயல்களால் விஜய் கவலையடைந்துள்ளார். பைக்கில் தலைக் கவசமின்றி பின்தொடர்வது, வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்கள் தனக்கு கவலை அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ‘எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்’ எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
நன்மைகளை வாரி வழங்கும் அகத்திக்கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤அகத்திக் கீரையுடன் அரிசி கழுவிய நீரை கலந்து சூப் வைத்து சாப்பிட்டால் இதயம், மூளை, கல்லீரல் வலிமை பெறும். ➤அகத்திக் கீரையை ஆவியில் வேக வைத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். ➤அகத்தி கீரையால் உடல் குளிர்ச்சி அடையும், பற்கள் உறுதிபெறும். ➤நோயெதிர்ப்பு சக்தி கூடுவதுடன் உடல் வலுப்பெறும். SHARE IT.
News December 25, 2025
உன்னாவ்: மேல்முறையீடு செய்ய CBI திட்டம்

நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் கைதான கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக Ex MLA குல்தீப் சிங் செங்கராலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி கோர்ட் ரத்து செய்து ஜாமினும் வழங்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு <<18663915>>காங்.,<<>> உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து CBI மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 25, 2025
கடன் தொல்லையை விரட்டும் மூல மந்திரம்!

காலை பிரம்ம முகூர்த்த வேளையில் (4 AM) விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.


