News October 2, 2025
விசிகவிற்கும் ஒருநாள் இப்படிப்பட்ட நிலை வரும்: EPS

ஆட்சியாளர்களுக்கு தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என EPS அறிவுறுத்தியுள்ளார். விசிக மதுஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க எப்படியெல்லாம் அலைக்கழித்தார்கள் என்பதை திருமாவளவன் மறக்க வேண்டாம் எனவும், விசிகவிற்கும் ஒருநாள் இப்படிப்பட்ட நிலை வரும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுகவினர் அளிக்கும் போலி வாக்குறுதிகள் ஒருபோதும் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 3, 2025
இம்மாதம் முதல் சீனாவிற்கு நேரடி விமான சேவை

இந்தியா – சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் 26-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா, சீனா உடனான எல்லை பிரச்னை காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
News October 3, 2025
விஜய்யின் தளபதிகளுக்கு ஜாமின் கிடைக்குமா?

கரூர் துயர வழக்கில் தவெக முக்கியத் தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்கள் நாளை மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளன. அதனுடன் தவெகவை தடை செய்யக் கோருவது உள்ளிட்ட மனுக்களையும் நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
News October 3, 2025
ராசி பலன்கள் (03.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.