News September 15, 2024
இட்லி தொண்டையில் சிக்கி பலி

ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நடந்த சாப்பாட்டு போட்டியில், இட்லி தொண்டையில் சிக்கிய முதியவர் உயிரிழந்தார். பாலக்காடு அருகே உள்ள கஞ்சிக்கோடு கொல்லப்புரா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சுரேஷ் என்பவர் வேகமாக சாப்பிட்ட போது, இட்லி தொண்டைக்குள் சிக்கியதில் மயங்கி விழுந்து பலியானார்.
Similar News
News November 25, 2025
சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹3 உயர்ந்து ₹174-க்கும், கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹1,74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1000 குறைந்த நிலையில் இன்று ₹3,000 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 25, 2025
மோசடி அரசியலை ஒழிப்பது தான் பாஜக திட்டம்

திராவிட அரசியலை பேசக்கூடிய கட்சிகளே இல்லை என்பதை உருவாக்குவதுதான் பாஜகவின் செயல் திட்டம் என திருமா பேசியதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். திராவிடம் என்பது நிலப்பரப்பு. திராவிடம் இந்தியாவின் அங்கம். அதை ஓர் இனமாக பிரித்து பேசி முன்வைக்க கூடிய திராவிட அரசியல் என்பது ஏமாற்று வேலை, மோசடி அரசியல். இதை ஒழிப்பதுதான் பாஜகவின் செயல்திட்டம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
News November 25, 2025
பிராமண பெண்கள் குறித்து IAS சர்ச்சை பேச்சு

ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்கு கன்னிகாதானம் செய்யும் வரை (அ) காதலிக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என ம.பி.,ஐ சேர்ந்த IAS அதிகாரி சந்தோஷ் வர்மா கூறியுள்ளார். IAS அதிகாரியின் கருத்து பிராமண பெண்களை அவமதிப்பதாக உள்ளதாகவும், அவர் மீது FIR போட வேண்டும் எனவும் பிராமண சமாஜ் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


