News March 30, 2024
அமெரிக்காவுக்கு குடியரசு துணைத் தலைவர் பதிலடி

கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ஜெர்மனி, ஐநாவுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசுகையில் “வலுவான நீதித்துறையை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. தனிநபரோ, ஒரு குழுவோ, அதில் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. ஆதலால் சட்டத்தின் ஆட்சி குறித்து யாருடைய பாடமும் இந்தியாவுக்கு தேவையில்லை” என பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News January 8, 2026
ராசி பலன்கள் (09.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 8, 2026
ரெடியா? நாளை முதல் காலை 11 – இரவு 8.30 வரை

49-வது சென்னை புத்தக கண்காட்சியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை (ஜன. 21 வரை) நடைபெறும் என்றும் இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுகதை, நாவல் உள்பட லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும் இந்த கண்காட்சியில், நீங்க வாங்க விரும்பும் புத்தகம் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.
News January 8, 2026
புயல்.. நாளை 7 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

2026-ன் முதல் <<18802928>>புயல்<<>> வங்கக் கடலில் நாளை(ஜன.9) உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நாளை திருவாரூர், நாகையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். BE CAREFUL


