News April 14, 2024
தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு மாற்றத்தை உருவாக்கும்

மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக நாட்டில் அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், “வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத மிகப்பெரும் அச்சுறுத்தலில் இந்தியா உள்ளது. ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க தேசத்திற்கு வழி்காட்டக்கூடிய வகையில் தமிழக மக்களின் தீர்ப்பு இருக்கும்” என்றார்.
Similar News
News December 14, 2025
ராசி பலன்கள் (14.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 14, 2025
நடப்பாண்டு சட்டப்பேரவை முடித்து வைப்பு: RN ரவி

ஜன.6, 2025-ல் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் RN ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான கவர்னரின் அறிவிப்பாணை, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்தாண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவதற்கான தேதியை அமைச்சரவை முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்யும். இது 2026-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையுடன் தொடங்கும்.
News December 14, 2025
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தது தவெக

மேலும் சில அதிமுக அதிருப்தி தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என <<18535366>>செங்கோட்டையன்<<>> கூறியிருந்தார். இந்நிலையில், அந்த தலைவர்கள் யார் என கேட்டதற்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என அருண்ராஜ் பதிலளித்துள்ளார். மேலும், கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, விஜய்யின் தலைமையை ஏற்பவர்களுடனே கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


