News August 4, 2024
டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1,28,913.5 கோடி சரிவு

தொடர் வளர்ச்சியை கண்டு வந்த இந்திய பங்குச்சந்தை, வர்த்தக வார இறுதியில் கடும் சரிவை எதிர்கொண்டது. இதன் எதிரொலியாக, டாப் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே வாரத்தில் ₹1,28,913.5 கோடி சரிந்தது. அதிகபட்சமாக TCS-இன் மதிப்பு ₹37,971.83 கோடி குறைந்து, ₹15,49,626.88 கோடியாக சரிந்தது. அதேபோல இன்ஃபோசிஸ், ஐடிசி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பும் அதிகளவில் சரிந்தன.
Similar News
News February 23, 2026
மகளிர் கடன் தள்ளுபடி.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

அதிமுக ஆட்சி அமைந்தால், <<19153160>>மாற்றுத் திறனாளி கடன், கல்விக் கடன்<<>> உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்படும் என EPS ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், சிறுபான்மையின மகளிர் தொழில் தொடங்க கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என அவர் தற்போது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். மேலும், தீபாவளி பண்டிகைக்கு மகளிருக்கு இலவச பட்டுச் சேலை வழங்கப்படும் எனவும் EPS உறுதி அளித்துள்ளார்.
News February 23, 2026
5.67 கோடி வாக்காளர்களின் முழு விவரம்..

SIR பணிக்கு பிறகு TN-ல் வாக்காளர் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும். வாக்காளர்கள் விவரம்: ஆண் – 2,77,38,925, பெண் – 2,89,60,838, மூன்றாம் பாலினம் – 7,617. அதுபோல, 18-19 வயதுக்குட்பட்டோர் – 12.51 லட்சம், மாற்றுத்திறனாளிகள் – 4.63 லட்சம், முதியவர்கள்(85+ வயது) – 3.99 லட்சம். இதில் 85+ வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க EC ஏற்பாடுகளை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 23, 2026
நண்பனுக்கு உதவச்சென்று ₹7 கோடி மோசடியில் சிக்கிய நபர்!

பெங்களூருவில் கெஞ்சி உதவிக்கேட்ட நண்பனுக்காக தனது வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒருவர் வழங்கியுள்ளார். ஆனால் அடுத்த சில நாள்களில் ₹7 கோடி ஆன்லைன் மோசடிக்காக அவரது வங்கி கணக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவரது வீட்டுக்கு தபால் சென்றது. அதில் ஷாக் ஆன அவர் தற்போது சைபர்கிரைமில் புகார் அளித்துள்ளார். இப்படி செய்தால் யாரைதான் நம்புவது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


