News May 7, 2025
கிடுகிடுவென உயரும் ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று வேகமாக உயர்ந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று ஒரே நாளில் 38 பைசா உயர்ந்து 84.58 ரூபாய் என வர்த்தகம் ஆகிறது. இந்தியா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்ததையடுத்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளை டிரம்ப் நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 28, 2025
டாப் 10-ல் ஹைதராபாத் பிரியாணி

இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகளில் ஒன்றான ஹைதராபாத் பிரியாணி உலகளவில் சிறந்த உணவு என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ‘டேஸ்ட் அட்லாஸ்’ வெளியிட்டுள்ள சிறந்த 50 அரிசி உணவுகள் பட்டியலில், இந்தியாவில் இருந்து ஹைதராபாத் பிரியாணி மட்டுமே இடம்பிடித்துள்ளது. சிறந்த டாப் 10 உணவுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை பிரியாணி பிரியர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 28, 2025
நாளை பள்ளிகள் 10 மாவட்டங்களில் விடுமுறை

புயல் எதிரொலியாக நாளை (நவ.29) நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விழுப்புரம், தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு விடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.3-ல் மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு உள்ளூர் விடுமுறை.
News November 28, 2025
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஊக்கமளிக்கிறது: PM மோடி

2025-26-ம் ஆண்டின் 2-ம் காலாண்டில் 8.2% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டது ஊக்கமளிப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சி ஆதரவு கொள்கைகள் மற்றும் சீர்திருந்தங்களின் தாக்கத்தை இது பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கடின உழைப்பு, முயற்சியின் வெளிப்பாடு இது என்றும், அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்று ஒவ்வொருவரின் வாழ்வையும் எளிதாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.


