News November 22, 2024
இஸ்ரேல் பிரதமருக்கு ஆதரவாக களமிறங்கிய USA

இஸ்ரேல் PM நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவிற்கு USA எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட ICC அதிகாரம் இல்லை எனவும், கைது வாரண்ட் பிறப்பிக்கும் தவறான முடிவு கவலைகளை தருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், டிரம்ப் ஆட்சியில் USA-வின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள மைக் வால்சும் இதை கடுமையாக எதிர்த்துள்ளார்.
Similar News
News January 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 6, மார்கழி 22 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News January 6, 2026
அதிமுக, பாஜகவுக்கு 3-வது இடம்: ஐ.பெரியசாமி

தமிழக அரசியல் பற்றிய கணிப்பு அமித்ஷாவுக்கு தெரியாது என அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். பிஹார், மகாராஷ்டிரா போல் தமிழ்நாடு இல்லை என தெரிவித்த அவர், பாஜக, அதிமுக இடையே கூட்டணி இருக்கிறதா எனவும் கேள்வியெழுப்பினார். மேலும் அந்த கூட்டணிக்கு 2026 தேர்தலில் 3-வது இடம்தான் கிடைக்கும் எனவும் திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 6, 2026
விஜய்யை வாழ்த்திய ‘பராசக்தி’ வில்லன்

‘ஜனநாயகன்’ டிரெய்லர் அற்புதமாக உள்ளது என ரவிமோகன் பாராட்டியுள்ளார். தனது X பதிவில் விஜய் அண்ணா, நீங்கள் எனக்காக எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என அவர் கூறியுள்ளார். ‘ஜனநாயகன்’ கண்டிப்பாக அனைவரின் இதயங்களையும் வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, ஹீரோக்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் ரசிகர்களும் சண்டையிடாமல் இருபடங்களையும் கொண்டாட வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


