News April 14, 2024
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காது

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காதென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக நேற்றிரவு இஸ்ரேல் நிலைகள் மீது ஈரான் ட்ரோன்கள், ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இஸ்ரேல் ஆதரவில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ளது.
Similar News
News October 29, 2025
காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு

டிரம்ப் மத்தியஸ்தம் செய்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம், தற்போது மீறப்பட்டுள்ளது. இஸ்ரேல் PM நெதன்யாகு, காஸாவில் உடனடியாக கடும் தாக்குதலை நடத்துமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது மீண்டும் அப்பாவி காஸா மக்கள் மீதான கொடூரத்திற்கு வித்திடும் என உலக தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
News October 29, 2025
SK பட இயக்குநருடன் இணையும் சூரி

நடிகர் சூரி அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில், ‘நேற்று இன்று நாளை’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. சூரி தற்போது ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘செல்ஃபி’ படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.
News October 29, 2025
ஸ்டீபன் ஹாக்கிங் பொன்மொழிகள்

*மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை.
*நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
*நீங்கள் எப்போதும் கோபமாக புகார் கூறிக் கொண்டே இருந்தால், உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.
*‘அறியாமை’ என்பது அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல, அது அறிவின் மாயையே ஆகும்.
*யார் விதியும் இங்கு எழுதப்படவில்லை.


