News June 15, 2024

முதல் தொடரிலேயே அமெரிக்க அணி வரலாற்று சாதனை

image

அமெரிக்க அணி முதன் முறையாக ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடி வருகிறது. இதுவே அந்த அணியின் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராகும். இதனால் ஆரம்பத்தில், சூப்பர் 8 சுற்றுக்காவது முன்னேறுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் அந்த அணியோ நினைத்ததற்கு மாறாக சிறப்பாக விளையாடி சூப்பர் 8க்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதனால் சூப்பர் 8ல் விளையாடும் பாகிஸ்தான் ஆசை நிராசையானது.

Similar News

News March 1, 2026

ரமலான் கொண்டாட்டங்களை புறக்கணிக்கும் முஸ்லிம்கள்

image

உலகம் முழுவதும் உள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக கருதப்பட்ட ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து <<19272201>>இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் போராட்டம்<<>> வெடித்துள்ளது. கமேனியின் மறைவு காரணமாக, இந்தாண்டு ரமலான் பண்டிகையைக் கொண்டாட போவதில்லை என்று இந்தியாவில் உள்ள ஷியா முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. தொழுகைகளில் கருப்பு பட்டையுடன் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 1, 2026

சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து.. உடனே இதை பாருங்க

image

அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவாக சிக்கன் உள்ளது. அடிக்கடி சிக்கன் சாப்பிட பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில், தினமும் சிக்கன் சாப்பிட்டால், அதிலுள்ள கலோரி, கொழுப்பினால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், வறுத்த சிக்கனில் இருக்கும் கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதால் இதய பிரச்னை ஏற்படலாம். அதனால், அளவாக சிக்கன் சாப்பிடுவதே நல்லது.

News March 1, 2026

கடந்தாண்டை விட 8.1% எகிறிய ஜிஎஸ்டி வசூல்!

image

பிப்ரவரி மாத GST வசூல் 1.83 லட்சம் கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தை விட 8.1% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டு மாதம் என்பதால் மார்ச் மாதத்தில் வரி வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரா ₹16,581 கோடி வசூலித்துள்ள நிலையில், தமிழகம் ₹6,811 கோடி GST வசூலித்துள்ளது.

error: Content is protected !!