News May 10, 2024
அமெரிக்காவின் முடிவு கவலையை அளிக்கிறது

தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றினால், இனி அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்காது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா சபைக்கான இஸ்ரேலின் தூதர் கிலாட் எர்டன், “அமெரிக்காவின் இந்த முடிவு தீவிரவாத ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக போராடும் இஸ்ரேலுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது” என வேதனையுடன் கூறியுள்ளார்.
Similar News
News August 20, 2025
திருப்பனந்தாள் காசி மடத்தின் மடாதிபதி காலமானார்

திருப்பனந்தாளில் காசி மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் 21-வது அதிபராக “கயிலை மாமுனிவர்”, ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார் சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) உள்ளார். இவர் 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீ காசி மடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972-ல் ஸ்ரீ காசி மடத்தின் அதிபரானார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
News August 20, 2025
வைரத்தை இழந்துவிட்டோம், தங்கத்தை.. தவெக பேனர்

விஜயகாந்தை மானசீக குருவாக ஏற்றால் அவரது போட்டோவை தவெக பயன்படுத்த அனுமதிப்பதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘வைரத்தை இழந்துவிட்டோம், தங்கத்தை இழந்துவிட மாட்டோம்’ என்ற வாசகம் அடங்கிய பேனர் மதுரை தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, <<17459105>>அண்ணா, MGR<<>> போட்டோக்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், விஜயகாந்த் போட்டோ இடம்பெற்றது பேசுபொருளாகியுள்ளது.
News August 20, 2025
இதுவரை ரஜினி – கமல் இணைந்து நடித்த படங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சாத்தியமானால் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பது தற்போதைய சூழலில் மரண மாஸாக இருக்கும். இதுவரை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள் 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், தப்புத் தாளங்கள், தில்லு முல்லு, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட 21 படங்களில் நடித்துள்ளனர்.