News August 9, 2024
13 மாநிலங்களை கடந்து செல்லும் ரயில்

கர்நாடகாவின் மங்களூருவில் இருந்து புறப்படும் ‘நவ்யுக்’ விரைவு ரயிலானது, 13 மாநிலங்களில் பயணித்து ஜம்மு தாவி சென்றடைகிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என 13 மாநிலங்களின் வழியே தொடர்ந்து 4 நாள்கள் பயணிக்கும் இந்த ரயில், ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டும் நிற்காமல் செல்கிறது. 13 மாநிலங்களை கடக்க 68 மணி 20 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு இந்த ரயில் முக்கிய தேர்வாக இருக்கிறது.
Similar News
News August 22, 2025
திங்கள்கிழமை பள்ளி மாணவர்களுக்கு.. HAPPY NEWS

+1 துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் (Re-total), மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. மார்க்கில் மாற்றம் இருக்கும் தேர்வர்களின் பட்டியல் ஆக.25 பிற்பகலில் வெளியாகவுள்ளது. மாற்றம் இல்லாதவர்களின் பதிவெண்கள் பட்டியலில் இடம்பெறாதாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் Notification பகுதியில் புதிய மார்க்கை அறியலாம் என அரசு அறிவித்துள்ளது. SHARE IT.
News August 22, 2025
TechTalk: WiFi Speed குறையுதா? நீங்களே சரி செய்யலாம்

வீட்ல இருக்க சில பொருட்கள், உதாரணத்துக்கு கண்ணாடி, இரும்பு மரச்சாமான், நீர் நிரப்பிய பெரிய குடுவைகள், ப்ளூடூத் சாதனங்கள், இதெல்லாம் WiFi சிக்னலை தடுக்குமாம். இதனால் இன்டர்நெட் வேகம் குறையலாம்னு Experts சொல்றாங்க. இதுக்கு எளிய தீர்வு என்னன்னா, WiFi Router-ஐ வீட்டின் நடுப்பகுதியில், உயரமாக, திறந்த இடத்தில் வைத்து பார்க்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
News August 22, 2025
சிறுபான்மையினருக்கு நெருக்கடி: CM ஸ்டாலின்

சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக CM ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.