News December 15, 2024

குழந்தைகளை தவிக்க விட்டு பெற்றோர் தற்கொலை

image

சிதம்பரம் அருகே 2 பெண் குழந்தைகளை நிர்கதியாக தவிக்க விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவரிடம் ​வீடியோ காலில் பேசி விட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி மறைவை அறிந்த கணவனும் சிங்கப்பூரிலேயே தற்கொலை செய்துகொண்டார். இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்த நிலையில், உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

Similar News

News March 8, 2026

காங்கிரசுக்காக தமிழகத்தை அடமானம் வைத்த திமுக

image

கூட்டணிக்குள் காங்கிரஸை தக்க வைக்க திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். காங்., – திமுக தொகுதி உடன்பாடு கையெழுத்தான மறுநாளே விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில காங்., அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதனை CM ஸ்டாலின் ஏன் கண்டிக்கைவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 8, 2026

உலகப்போரையே நிறுத்திய பெண்கள்.. வரலாறு தெரியுமா?

image

புராணக் கதைகளால் போர் வெடிப்பதே பெண்களால்தான் என்ற தவறான புரிதல் சமூகத்தில் இருக்கிறது. ஆனால் உலகப்போரையே நிறுத்த பெண்கள் முக்கியப் பங்கு வகித்த வரலாற்றை பற்றி தெரியுமா? 8 மார்ச், 1917-ல் World War 1 போது பசி, பட்டினி, வறுமை இருந்தது. இதனை எதிர்த்து ஒன்று கூடிய பெண்கள் ‘Bread & Peace’ போராட்டத்தை ரஷ்யாவில் நடத்தினார்கள். 1918-ல் போர் நின்றதோடு, ரஷ்ய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

News March 8, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை(9.3.2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியின்படி மாற்றமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!