News December 22, 2024

நைஜீரியாவில் நடந்தேறிய துயரம்!

image

நைஜீரியாவின் மைதமா நகரில் உள்ள St.டிரினிட்டி கிறிஸ்தவ தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பல பகுதிகளில், பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையில் வாடிவருகின்றனர். இந்நிலையில், வறுமையில் உழன்றுவரும் அம்மக்கள் பரிசு பொருட்களை வாங்க குவிந்தபோது, நெரிசல் ஏற்பட்டு இந்த துயரச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

Similar News

News September 10, 2025

ரஞ்சி கோப்பை: TN அணி அறிவிப்பு

image

அக்டோபர் மாதம் தொடங்கும் ரஞ்சி கோப்பைக்கான TN அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெகதீசன் தலைமையிலான அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா இந்திரஜித், ஷாருக் கான், விமல், சச்சின் பி, ஆண்ட்ரே சித்தார்த், அம்ப்ரிஷ், வித்யுத், சந்திரசேகர், சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங், அச்யுத், ஹேம்சுதேசன், திரிலோக், அஜிதேஷ் இடம்பெற்றுள்ளனர். TN அணி ரஞ்சி கோப்பையை வென்று 37 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த அணி கோப்பையை வெல்லுமா?

News September 10, 2025

செப்டம்பர் 10: வரலாற்றில் இன்று

image

*1780 – பொள்ளிலூரில் திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே போர் நடந்தது. *1965 – அமிர்தசரஸை கைப்பற்ற பாக். எடுத்த முயற்சி தோல்வி. *1978 – மஞ்சு வாரியர் பிறந்தநாள். *1980 – ரவி மோகன் பிறந்தநாள். *1984 – பாடகி சின்மயி பிறந்தநாள். *2020 – வடிவேல் பாலாஜி மறைந்த நாள்.

News September 10, 2025

பஞ்சாப்பிற்கு ₹1,600 நிதியுதவி : PM மோடி

image

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பிற்கு ₹1,600 கோடி நிதியுதவி வழங்கப்படும் என PM மோடி அறிவித்துள்ளார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட PM, பிறகு குருதாஸ்பூரில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ₹60,000 கோடி நிவாரணம் கேட்ட நிலையில் மிகக் குறைவான தொகை வழங்கப்படுவதாக பஞ்சாப் வருவாய் துறை அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக PM ஹிமாச்சலுக்கு ₹1,500 கோடி நிதியுதவி அறிவித்திருந்தார்.

error: Content is protected !!