News September 14, 2025
நாட்டின் டாப் 2 Dirtiest ஸ்டேஷன் சென்னைல தான் இருக்கு!

மிகவும் அசுத்தமாக இருக்கும் ரயில்வே நிலையங்கள் என்றால், நம்மில் பலரும் ஏதோ வடநாட்டில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், அது உண்மையில்லை. Quality Council of India (QCI) நடத்திய டேட்டா உங்களை அதிர வைக்கலாம். ஆம், முதல் இரு இடங்களில் இருப்பது சென்னையில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் தான். எந்த பிளாட்பாரங்கள் என தெரிந்து கொள்ள, Photo-வை Swipe பண்ணுங்க.
Similar News
News September 14, 2025
சென்சார் போர்டு தடையாக உள்ளது: பா.ரஞ்சித்

வலதுசாரி ஆதரவு மனப்பான்மை கொண்ட சென்சார் போர்டு உறுப்பினர்களை கையாள்வது கடினமாக உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இப்போது, சென்சார் போர்டின் தடைகளை தாண்டி ஒரு படத்தை ரிலீஸ் செய்வது கடினமாக உள்ளதாகவும், மக்களை நம்பியே ‘தண்டகாரண்யம்’ போன்ற படங்கள் எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். ‘தண்டகாரண்யம்’ படத்தை அதியன் ஆதிரை இயக்க, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
News September 14, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

புதிதாக 17 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 9 லட்சம் பேர் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என DCM உதயநிதி அறிவித்துள்ளார். தீபாவளி பரிசாக அவர்களது வங்கிக் கணக்கில் அடுத்த மாதம் 15-ம் தேதி ₹1,000 வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனர்களின் எண்ணிக்கை 1.24 கோடியாக அதிகரிக்கும்.
News September 14, 2025
இரவில் போன் பார்த்தால் ஆண்மை குறையுமா..!

மாலை & இரவில் நீண்டநேரம் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஃபோனில் இருந்து வெளியாகும் குறைந்த அலைநீள ஒளியானது விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல்திறன் மற்றும் ஆயுளை பாதிக்கிறது. விந்தணுக்களின் DNA-ல் பாதிப்பும் ஏற்படுகிறது. இந்தியாவில் 23% ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதாக WHO கூறுகிறது. ஆண்களே, போன் பயன்படுத்துவதை கொஞ்சம் குறைக்கலாமே.