News August 12, 2024

மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்

image

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ள நிலையில், கஞ்சா வைத்திருந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கின் குண்டர் சட்டத்தை நீதிமன்றம் 3 நாட்களுக்கு முன் ரத்து செய்த நிலையில், போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Similar News

News March 9, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 சரிவு!

image

<<19333418>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியால் சென்னையில் தங்கம் விலை இன்று(மார்ச் 9) சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம், 1 கிராம் ₹14,950-க்கும், சவரன் ₹1,19,600-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹290-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,90,000-க்கும் விற்பனையாகிறது.

News March 9, 2026

‘ஜன நாயகன்’ படத்துக்கு இன்று முக்கியமான நாள்!

image

‘ஜன நாயகன்’ படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் இன்று ரிவைசிங் கமிட்டி படத்தை பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சுமுகமாக முடியும் பட்சத்தில் படம் மார்ச் 19-ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தினர் சொல்கின்றனர். இது விஜய்யின் கடைசி படம் என கூறப்படுவதால் தேர்தலுக்கு முன் படம் ரிலீசாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

News March 9, 2026

புதுவையில் ஓயாத திமுக – காங்., கூட்டணி பஞ்சாயத்து!

image

புதுச்சேரியில், கூட்டணிக்கு யார் தலைமை என்ற பஞ்சாயத்தில் இன்னும் பேச்சுவார்த்தையே தொடங்காமல் திமுக – காங்கிரஸ் தலைவர்கள் மோதல் போக்கில் உள்ளனர். இதனால், அந்தக் கூட்டணியில் உள்ள <<19317882>>CPM 2 தொகுதிகளில்<<>> தனியாக போட்டி என ஏற்கெனவே அறிவித்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் தான் பெரிய கட்சி என்பதால் தங்கள் அலுவலகத்திற்கு திமுக வர வேண்டும் என நாராயணசாமி வெளிப்படையாக அறிவித்துள்ளார். மோதல் முடிவுக்கு வருமா?

error: Content is protected !!