News June 25, 2024
வினோத குறிப்பு எழுதிவிட்டு சென்ற திருடன்

சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகத்தில் புகுந்த திருடன், வாட்ச், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். வினோதம் என்னவென்றால், திருடிய பொருட்கள் வேண்டுமானால், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கடிதம் எழுதிவிட்டு சென்றுள்ளார். மேலும், பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ள திருடன், அலுவலகத்தின் நலன் கருதி சில பொருட்களை மட்டும் எடுத்துச் செல்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 28, 2025
கிருஷ்ணகிரி தேர்தல் பணியாளர்கள் கௌரவிப்பு

நேற்று (நவ-27)ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100% (எஸ்ஐஆர்) கணக்கீட்டு படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த சிறப்பான பணியை நிறைவேற்றிய 9 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
News November 28, 2025
DKS-ஐ மறைமுகமாக தாக்கிய சித்தராமையா

தன்னை CM ஆக்க <<18401800>>காங்., வாக்கு கொடுத்தது<<>> என்பதுபோல பதிவிட்டு பிறகு அதை நீக்கியிருந்தார் டி.கே.சிவக்குமார். இந்நிலையில், கர்நாடகா மக்கள் கொடுத்த பொறுப்பு 5 ஆண்டுகளுக்கானது எனவும், காங்.,ம் தானும் அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி வருவதாகவும் சித்தராமையா X-ல் பதிவிட்டிருக்கிறார். மேலும், கர்நாடகாவுக்கு காங்., கொடுத்தது வெறும் வாக்கு அல்ல, அது இந்த உலகத்தை விட பெரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
சருமம் பளிச்சிட உதவும் மாதுளை தேநீர்!

சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க, ரத்த சர்க்கரை அளவு குறைய, மழைக்காலத்தில் அதிகரிக்கும் கீழ்வாத பிரச்னைகளுக்கு இந்த மாதுளை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலர்ந்த மாதுளை தோல், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக்கி நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இவற்றை வடிகட்டி, அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்தால், சுவையான மாதுளை தேநீர் ரெடி. SHARE IT.


