News April 17, 2025
இசைக்கு வந்த சோதனை… செயலிழந்த Spotify..

பாடல்களை உள்ளடக்கிய Spotify தளம் உலகளவில் செயலிழந்ததால் பயனர்கள் சிக்கலை சந்தித்தனர். செல்போன், டெஸ்க்டாப் என அனைத்திலும் பாதிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் மட்டும் சரியாக பிளே ஆகும் நிலையில், செயலியின் மற்ற பயன்பாடுகள் தடைபட்டுள்ளது. பிரச்னையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Spotify தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க Spotify வேலை செய்யுதா?
Similar News
News December 20, 2025
40 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்கள் நீக்கம்: சீமான்

ஆட்சியாளர்களுக்கு தேவையில்லாத வாக்குகளை நீக்குவதே SIR பணி என்று சீமான் சாடியுள்ளார். தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 40 லட்சம் வாக்காளர்கள் இஸ்லாமியர்களாக இருக்கலாம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்பெல்லாம் வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர் என்றும், தற்போது ஆட்சியாளர்கள் தங்களது வாக்காளர்களை தேர்வு செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
பூமியின் முதல் உயிரினம் எது தெரியுமா?

பூமியில் மனிதர்கள், டைனோசர்களுக்கு பல கோடி ஆண்டுகள் முன்பே தோன்றிய முதல் உயிரினம் பற்றிய கேள்விக்கு விடை தேடி வந்த விஞ்ஞானிகள், ஓமன் மற்றும் இந்திய பாறைகளில் ஒரு வியக்க வைக்கும் உண்மையை கண்டறிந்தனர். கடல்களில் உள்ள கடற்பஞ்சுகளின் மூதாதையர்கள் தான் பூமியின் முதல் விலங்குகள் என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். சுமார் 54.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவை கடலில் வாழ்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
News December 20, 2025
PM மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்!

மேற்கு வங்க மாநிலம் தாஹேர்பூருக்கு புறப்பட்ட PM மோடியின் ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தா திரும்பியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் திருப்பி விடப்பட்டுள்ளது. முன்னதாக தாஹேர்பூரில் நடைபெறவுள்ள பாஜகவின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற <<18621174>>பாஜக தொண்டர்கள் 4 பேர்<<>> ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


