News April 25, 2025
சாகும் வரை காத்திருந்த தீவிரவாதி

தனது கணவரை சுட்டுவிட்டு, அவர் சாகும் வரை காத்திருந்து, பின்னரே தீவிரவாதி அங்கிருந்து சென்றதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ம.பி.யைச் சேர்ந்த சைலேஷின் மனைவி ஷீதல் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் சென்ற பிறகும் கூட தங்களுக்கு உடனடி உதவி கிடைக்கவில்லை எனவும், சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ராணுவ வீரரிடம் இது பற்றி சொன்னபோது, ஏன் இங்கு வந்தீர்கள் என அவர் கடிந்து கொண்டதாகவும் ஷீதல் கூறியுள்ளார்.
Similar News
News January 3, 2026
ஆயிரம் அமித்ஷா வந்தாலும் மாற்றம் நடக்காது: சீமான்

TN-ஐ யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். திருச்சியில் பேட்டியளித்த அவர், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் TN-ல் எந்த மாற்றமும் நடக்காது என சவால் விடுத்தார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என திருமாவளவன் பேசுகிறார்; ஆனால், திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவரே அவர் தான் என்றும் கூறினார். உங்கள் கருத்து?
News January 3, 2026
₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு CLARITY

2026 மார்ச் முதல் ₹500 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற தகவல்
SM-ல் பரவி வருகிறது. இந்நிலையில், ₹500 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்படும் என பரவும் செய்தி பொய்யானவை எனவும், இதுகுறித்து ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 3, 2026
70 ஆண்டுகளை கடந்தும் பேசப்படும் ‘ரத்தக்கண்ணீர்’

‘அடியே காந்தா’ என்ற வசனம் தற்போது நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும், இந்த வசனம் இடம்பெற்ற படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நீங்கவில்லை. M.R.ராதாவின் தனித்துவமான நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது. திருவாரூர் தங்கராசு எழுத்தில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் உருவான ‘ரத்தக்கண்ணீர்’, தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் கிளாசிக் படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. படத்தில் பிடித்த சீன் எது?


