News May 27, 2024
அடுத்த 5 நாள்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும்

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 5 நாள்களுக்கு மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்!

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், வேட்பாளர் யார் என்பதை பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். சட்டமன்ற தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பு இன்னும் ஒருவாரத்தில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார். அதேசமயம் ராஜ்யசபா சீட் சுதீஷுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2026
காங்கிரஸை சீண்டிய திமுக அமைச்சர்!

தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பேசிய அவர், திமுகவுடன் இருந்தால்தான் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் என்றும், அந்த அந்தஸ்தை இழக்க அவர்கள் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். <<19287048>>தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில்<<>>, காங்கிரஸை சீண்டும் வகையில் ரகுபதி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
News March 3, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. சிறுவன் சிக்கினான்

புத்தகப் பையை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எத்தகைய கொடுமை? சிவகங்கையில் +1 மாணவியை கிஷோர் என்ற சிறுவன், பிரவீன், சாமியார் ராமநாதன் ஆகிய 3 பேரும் ரேப் செய்துள்ளனர். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஹாஸ்பிடல் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரில் மூவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளான்.


