News May 14, 2024
மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் தாெழில்நுட்பம்

மனதில் நினைப்பதை 79% துல்லியமாக கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். supramarginal gyrus என்ற தொழில்நுட்ப அடிப்படையில் உருவான சாதனத்தை, பேசும் திறனற்ற 2 பேரின் முளைப்பகுதி அருகே பொருத்தி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவர்கள் நினைப்பதை மூளையில் இருந்து சிக்னல் மூலம் கிரகித்து மொழிபெயர்த்து, எழுத்தாக பதிவு செய்தது.
Similar News
News August 25, 2025
விரைவில் இந்தியா வரும் உக்ரைன் அதிபர்

PM மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர உள்ளார். இந்த தகவலை பகிர்ந்த அந்நாட்டு தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக், பயணத் தேசி விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவுடனான போர் மற்றும் இந்தியா – உக்ரைன் உறவு குறித்து, மோடியுடன் ஜெலன்ஸ்கி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. போரை நிறுத்த ஏற்கனவே புதினிடமும் மோடி ஆலோசித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News August 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 25, 2025
ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் வேண்டும்: சத்யராஜ்

ஆணவக் கொலைகள் நடப்பதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சத்யராஜ், அதனை தடுக்க சட்ட இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காதல் என்பது மிகவும் எளிதான விஷயம் என்றும், இதற்கெல்லாம் கொலை செய்வது நியாயமில்லை என்றும் தெரிவித்தார். மனித வாழ்க்கையில் காதலும் காமமும் அத்தியாவசியமான விஷயம் என்றும் நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டார்.