News June 29, 2024
முதலில் பேட் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு?

இறுதிப் போட்டி நடைபெறும் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்த அணிகளே பெரும்பாலும் வென்றுள்ளதால், இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே அதிக வாய்ப்புள்ளது. ரன் குவிப்புக்கு இந்த மைதானம் பெரிய அளவில் உதவாது எனக் கருதப்படுவதால், பவுலர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 19, 2025
விஜய் பரப்புரையில் மின்தடை ஏற்படாது!

நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக, திருவாரூரில் நாளை மாதாந்தர பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை ஒத்திவைப்பதாகவும் நாளை தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்றும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த முறை அரியலூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 19, 2025
ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

ஆசிய கோப்பையில், ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், இது சம்பிரதாய மோதலாகவே பார்க்கப்படுகிறது. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா களம் காணுகிறது. இந்திய அணியில் 2 மாற்றங்களாக பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணா, வருணுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.
News September 19, 2025
சூரிய கிரகணத்தில் தம்பதியர் ஒன்று சேரலாமா?

நாளை மறுநாள் (செப்.21) இரவு 10.59 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சமயத்தில் பல விஷயங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, தம்பதியர் உறவில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்தால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.