News May 24, 2024
ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய க்ளாஸன் 50, டிராவிஸ் ஹெட் 34, திரிபாதி 37 ரன்கள் எடுத்தனர். RR அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் ஷர்மா 2, போல்ட், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து RR அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 25, 2026
நாளை ராம நவமி.. இதை மறக்காமல் பண்ணுங்க!

அதிகாலை குளித்து, வீட்டை சுத்தம் செய்யுங்க. ராமர் படத்திற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை சாற்றுங்க. பழம், வெற்றிலை, பூ வைத்து அர்ச்சனை செய்யுங்க. நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை படைக்கலாம். முடிந்தவர்கள் பால், பழம் ஆகியவற்றை மட்டும் எடுத்து கொண்டு நாள் முழுவதும் விரதமிருந்து, மாலையில் விளக்கேற்றி ராமர் நாமத்தை சொல்லி விரதத்தை முடிக்கலாம். SHARE IT.
News March 25, 2026
இன்று பிரசாரத்தை தொடங்கும் EPS

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்தை EPS மயிலாப்பூரில் தொடங்குகிறார். அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்காக ஏப்ரல் 1-ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார். சென்னையைத் தொடர்ந்து நாகர்கோவில், ராதாபுரம், கடையநல்லூர், கோவில்பட்டி, சிவகாசி, பரமக்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
News March 25, 2026
BREAKING: திமுக கூட்டணி.. ஒரே இரவில் மாறியது

கூட்டணியில் பிரதான கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துள்ளது. நேற்று இரவு இறுதியாக தேமுதிகவுடனான பங்கீடு முடிந்தது. தற்போது திமுக வசம் 168 இடங்கள் உள்ளன. மதிமுக – 3, மமக & கொமதேக ஆகியவை தலா 2 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இனி கூட்டணியில் சேரும் கட்சிகளும் திமுக சின்னத்தில் போட்டியிடவே வாய்ப்புள்ளது. எனவே, இம்முறை உதயசூரியன் சின்னம் 175 இடங்களில் களமிறங்கவுள்ளது.


