News April 14, 2024
கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 161/7 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே LSG சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. LSG அணியில் அதிகபட்சமாக பூரண் 45, கே.எல்.ராகுல் 39, பதோனி 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். KKR தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Similar News
News December 13, 2025
இன்று இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது.
News December 13, 2025
வேட்பாளர் நேர்காணல்.. விஜய் பக்கா பிளான்

தை பொங்கலுக்கு வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனெவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை தயார் செய்து, தொகுதிக்கு 4 பேர் வீதம் தேர்வு செய்து வைத்துள்ளாராம். அதில் 60% மாவட்ட செயலாளர்களுக்கு, பெண்களுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மீதமுள்ள 40% தொகுதிகள் பிரபலங்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.
News December 13, 2025
அதிக சம்பளம் வாங்கிய ஹீரோக்கள்

2025-ம் ஆண்டு அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. இந்தாண்டு, ஒருபடத்துக்கு அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று தெரியுமா? இதுதொடர்பான தகவலை மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


