News May 2, 2024
மழையை சேமிக்கும் திறன் தமிழக அரசிடம் இல்லை

கடவுள் அதிக மழையை தருகிறார், ஆனால் அதை சேமிக்கும் திறன் தமிழக அரசிடம் இல்லையென பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோடைக் காலத்தில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசிடம் தண்ணீர் கேட்பது என்பது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது என்றும், தண்ணீர் வரும்போது வீணாக கடலில் கலக்க விடுவதும், பின்னர் தண்ணீர் இல்லை என்பதும் தொடர் கதையாக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News January 29, 2026
தமிழக தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கும் ECI அழைப்பு விடுத்துள்ளது.
News January 29, 2026
கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை: ஓபிஎஸ்

தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ முடிவெடுக்கவில்லை என OPS கூறியுள்ளார். அதிமுகவை காக்கவும், பிரிந்தவர்களை ஒன்றிணைக்கவும் தான் தற்போது வரை போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுகவில் மீண்டும் சேர நான் ரெடி என்ற அவர், அண்ணன் எடப்பாடி ரெடியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 29, 2026
பெண்கள் பாதுகாப்பில் பொய் பேசும் CM: அண்ணாமலை

TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X-ல், சென்னையில் <<18991526>>அரசு கலைக்கல்லூரியில் பெண்<<>> ஒருவருக்கு 3 நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், TN-ல் பெண்கள் பாதுகாப்பு குறித்து பொய் பேசும் CM ஸ்டாலின், இனியாவது உண்மையை உணர்ந்து பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


