News March 21, 2024
உச்சநீதிமன்றம் ஆளுநரின் தலையில் கொட்டியுள்ளது

உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு சரியான கொட்டு வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை பற்றி அவர் கவலைப்பட மாட்டார். தலையில் எவ்வளவு கொட்டினாலும் அவருக்கு வலிக்காது. அவர் இரும்பு தலையர். ஆளுநரின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது அவரின் நடத்தைக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.
Similar News
News November 7, 2025
இந்திய அணிக்கு குட்பை சொல்ல சுனில் சேத்ரி தயார்

இந்திய கால்பந்தின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்த சுனில் சேத்ரி, கடந்த ஆண்டே தனது ஓய்வை அறிவித்தார். ஆனால் இந்திய அணிக்கு அவரின் தேவை இருந்ததால், பயிற்சியாளரின் அழைப்பை ஏற்று மீண்டும் அணியில் சேர்ந்தார். 2027 ஆசிய கோப்பைக்கு தகுதி பெற அவர் எடுத்த முயற்சிகள் அணிக்கு கைகொடுக்கவில்லை. இதனால் இந்திய அணிக்கு குட் பை சொல்ல சுனில் சேத்ரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 7, 2025
உங்கள் தினசரி உணவில் பூண்டு இருக்கா?

பூண்டு சாப்பிட பிடிக்குமா? தினமும் உங்கள் உணவில் சேர்க்க மறக்காதீங்க. உணவுடன் சேர்த்து அல்லது வெறுமனே 2 முதல் 3 பூண்டு பற்கள் சாப்பிடுவது நல்லது. இது, உடலுக்கு தேவையான பல நன்மைகள் தரும் ஒரு இயற்கை மருந்து. இதனை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து தெரிஞ்சுகோங்க. இதை SHARE பண்ணுங்க.
News November 7, 2025
வந்தே மாதரம் பாடல் வரிகள் நீக்கம்: புதிய சர்ச்சை

<<4747152>>வந்தே மாதரம்<<>> பாடலில் இருந்த முக்கிய வரிகளை காங்கிரஸ் நீக்கிவிட்டதாக PM மோடி குற்றம்சாட்டியுள்ளார். இந்த சர்ச்சை 1937-ல் தொடங்கியது. வந்தே மாதரத்தை தேசிய பாடலாக ஏற்க முடிவு செய்த காங்கிரஸ், அதிலிருந்த இந்துமத கடவுளர்களின் பெயர்கள், அடையாளங்கள் கொண்ட சில வரிகளை தவிர்த்தது. மதங்கள் கடந்து அனைவரும் பாடவேண்டும் என்பதற்காக அப்படி செய்ததாக காங்., கூறியது. இதைத் தான் தற்போது மோடி விமர்சித்துள்ளார்.


