News March 17, 2024
அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை காலை இவ்வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது.
Similar News
News November 20, 2024
தமிழில் எல்.ஐ.சி இணையதளம்: ஓபிஎஸ்
தமிழில் எல்.ஐ.சி இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். எல்ஐசி இணையதள முகப்பு பக்கம் ஹிந்தியில் மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இந்தி திணிப்பை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2024
தினம் ஒரு திருக்குறள்
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
▶குறள் எண்: 104
▶குறள்:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
▶பொருள்: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
News November 20, 2024
புரோ கபடி லீக்: புனேரி பால்டன் – உ.பி யோதாஸ் ஆட்டம் டிரா
புரோ கபடி லீக் தொடரில் புனேரி பால்டன் – உ.பி யோதாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்டம் 29-29 என்ற புள்ளிகள் கணக்கில் டிராவில் முடிந்தது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஹரியானா அணி 11 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பை மற்றும் பாட்னா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.