News March 15, 2025

இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்

image

தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38°C மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால், வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

Similar News

News March 15, 2025

நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

image

தெரு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா (61) என்பவர் சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்குப்பிறகு இன்று உயிரிழந்தார். அவரை கடித்த நாய், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கடி பட்டவரும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எச்சரிக்கையுடன் இருங்கள்.

News March 15, 2025

சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்.. 4 பேர் பலி

image

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஹோலி கொண்டாட்டம் முடிந்து, ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களான அவர்கள் ஆற்றில் குளித்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டதால் இந்த துயர சம்பவம் நேரிட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 4 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டன.

News March 15, 2025

2 நாட்களில் 4 முறை நிலநடுக்கம்…

image

திபெத்தில் கடந்த 2 நாட்களில் 4 முறை நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் நேரிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ரிக்டர் அளவில் 3.5 முதல் 4.3 வரை பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு 12.49 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் 4 ஆவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது. யுரேசியன் தட்டுப்பகுதியில் திபெத் அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!