News April 19, 2025
வெயில் கொளுத்தும்.. மதியம் வெளியே வராதீங்க

பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம்(IMD) எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். எனவே, பொதுமக்கள் மதியம் (12 -3 மணி வரை) வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், அடிக்கடி நீர், இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கவும்.
Similar News
News December 20, 2025
திருவள்ளூர்: 12th பாஸ் போதும்.. ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

▶️ இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️ கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
▶️ மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
▶️ விருப்பமுள்ளவர்கள் <
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 20, 2025
டெல்லி: காற்றுமாசை தடுக்க அரசுப் பள்ளிகளில் Air Purifiers

டெல்லியின் காற்றுமாசு நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இது அங்கு பெரும் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளின் நலம் காக்க டெல்லி அரசு ‘பிரீத் ஸ்மார்ட்’ திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, 10,000 அரசுப் பள்ளி வகுப்பறைகளில் காற்றை சுத்தப்படுத்தும் Air Purifiers நிறுவப்படும். விரைவில் இது 38,000 வகுப்பறைகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
BREAKING: விஜய் கட்சியில் அதிரடி நீக்கம்

தவெகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் கட்சி பதவியை பறித்து புஸ்ஸி ஆனந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெகவில் பதவி வழங்குவதாகக் கூறி பெண் நிர்வாகியிடம் செந்தில்நாதன் தவறாக நடந்து கொண்டதாக வீடியோ ஒன்று SM-ல் வைரலாகி வருவது கவனிக்கத்தக்கது.


