News April 27, 2025

வெயில் கொளுத்தும்.. வெளியே வராதீங்க..

image

கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இயல்பை விட இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்

Similar News

News April 27, 2025

செந்தில் பாலாஜி இன்று ராஜினாமா?

image

அமைச்சர் பதவியை இன்று மாலை (அ) நாளை காலை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மோசடி வழக்கில் அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவெடுக்க நாளை வரை SC கெடு விதித்தது. இதை சுட்டிக்காட்டிய திமுக வட்டாரங்கள், ஜாமீனை தக்க வைக்க பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளார், கோவையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு பிறகு அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறுகின்றன.

News April 27, 2025

தேமுதிக முக்கிய முடிவு : பிரேமலதா பிளான் என்ன?

image

வருகிற 30-ம் தேதி பாலக்கோட்டில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ADMK – BJP கூட்டணி உருவாகியுள்ள நிலையில், 2026 தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா தலைமையில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவுடன் உரசல் இருப்பினும், பாஜகவை அண்மையில் தேமுதிக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2025

தமிழ் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்

image

தமிழ் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநரும், நடிகருமான மனோஜ் குமார் அண்மையில் காலமானார். இதேபோல், நடிகர் நாகேந்திரன் நேற்று திடீரென மரணமடைந்தார். மேலும் நடிகர்கள் கராத்தே ஹூசைனி, ரவிகுமார், நடிகை பிந்து கோஸ், இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி, தயாரிப்பாளர் ராமநாதன், டிவி நடிகர் யுவராஜ் நேத்ரன் ஆகியோரும் அண்மையில் மரணமடைந்தனர்.

error: Content is protected !!