News May 15, 2024
கோடை மழை வெளுத்து வாங்குகிறது

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சை, விருதுநகர், கடலூர், சேலம், நெல்லை, குமரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்ததாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Similar News
News October 13, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹7,000 உயர்வு.. புதிய உச்சம் தொட்டது

தங்கத்தை விட கூடுதல் மடங்கு விலையேற்றத்தை சந்தித்து வருகிறது வெள்ளி. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹7,000 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹197-க்கும், 1 கிலோ ₹1.97 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹20,000 அதிகரித்திருப்பது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
News October 13, 2025
ஊதுபத்தியில் இப்படி ஒரு ஆபத்தா?

வீட்டின் பூஜை அறைகளில் ஊதிபத்தியும் சாம்பிராணியும் பக்தி மணம் பரப்புகின்றன. இருப்பினும், சில வகை ஊதுபத்திகளில் இருந்து வரும் புகை, நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றில் உள்ள ரசாயன கலப்புகளால், புகையை சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிப்பு, ஏன் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து கூட உள்ளதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News October 13, 2025
பணக்கார மாநிலங்கள்: TNக்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது முன்னணியில் உள்ளன. டாப் 5 இடங்களில் தமிழகம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. அந்த 5 மாநிலங்கள் எவை எவை, தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது உள்ளிட்ட தகவல்கள் மேலே போட்டோஸாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக SWIPE செய்து பாருங்கள்.